tamilnadu

img

கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பதவி நீக்கம்: புதிய சட்டம்

சென்னை, ஜன. 9- கூட்டுறவு சங்கங்களின் தலை வர் மற்றும் துணை தலைவர் செய்யும் தவறுகளுக்கு தண்டனை விதிக்க வழிவகுக்கும்  சட்டதிருத்த மசோதா சட்டப்பேர வையில் எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறி யது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கல் செய்த இந்த மசோதாவில், கையாடல், மோசடி மற்றும் தவறான நடத்தை களுக்கு கூட்டுறவு சங்கத் தலை வர், துணைத் தலைவர் மீது நட வடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கூட்டுறவு சங்க  தலைவரோ, அல்லது துணை  தலைவரோ குற்றமிழைத்த தற்கான சாட்சியம் இருக்கும் பட்சத்தில், பதிவாளரின் கவ னத்திற்கு கொண்டு வந்தால், முதல் நோக்கில் ஆறு மாத காலத்துக்கு தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யலாம் என்றும் அதற்கான காரணத்தை எழுத்து வடிவில் பதிவு செய்து மேலும் 6 மாதம் அல்லது இறுதி  உத்தரவை பிறப்பிக்கும் வரை  இதில் எது முந்தியதோ அதுவரை  அவ்வப்போது கால நீட்டிப்பு செய்யலாம் என்றும்  மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்த  மசோதா மீது நடந்த விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் திராவிடமணி,“ மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை தகுதி இழப்பு மட்டுமே செய்ய முடியும். தற்காலிக பணி நீக்கம் செய்ய முடியாது. அப்படி செய்தால் அரசு பணியாளர்களுக்கு வழங்கு வதுபோன்று பிழைப்பூதியம் தரவேண்டியது வரும். எனவே, நீதிமன்றத்திற்கு சென்றால் அர சின் சட்டத்திருத்தம் செல்லாது  என்றும் பழி வாங்கும்நோக்கத் திற்காக கொண்டு வரும் இந்த மசோதா ஏற்புடையதல்ல” என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்த அமைச்  சர், “சட்டத்தில் வழி வகை செய்து  கூட்டுறவு அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் சைபர் குற்றம்  அதிகரித்து வரும் இந்த நிலை யில் வைப்பு தொகையை பாது காக்கவும் இந்த புதிய பிரிவை கொண்டு வருகிறோம். யாருக் கும் அச்சம் தேவையில்லை” என்றார். பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

;